புதிய குடும்ப அட்டை பெற பிப். 1, 15-ல் சிறப்பு முகாம்


பெரம்பலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் சேர்த்தல், திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம் பிப். 1 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், குடும்ப அட்டை தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், பிப். 1-ல் பெரம்பலூர், வேப்பூர் வட்டங்களுக்கும், பிப். 15-ல் ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டங்களுக்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் நபர்கள், குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கியதற்கான சான்று, குடியிருப்பதற்கான சான்றுடன் விண்ணப்பத்தை நிறைவு செய்து அளிக்க வேண்டும். மேலும், குழந்தைகளின் பெயர்களைச் சேர்க்க அவர்களின் பிறப்புச் சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும்.
குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய விரும்வோர் சேர்க்கப்பட வேண்டிய அல்லது திருத்தப்பட வேண்டிய நபருக்கான பிறப்புச் சான்றிதழ் அல்லது கல்வி நிலையத்தில் படித்து வருவதற்கான சான்றிதழ்களைக் கொண்டு வரவேண்டும். குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் நீக்கப்பட வேண்டிய நபரின் திருமண அழைப்பிதழ் அல்லது இறப்புச் சான்றிதழ் நகலைக் கொண்டுவர வேண்டும். மனுவுடன் அசல் குடும்ப அட்டை தாக்கல் செய்ய வேண்டும்.
சிறப்பு முகாம் நடைபெறும் நாள்களில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
புதிய குடும்ப அட்டை பெற பிப். 1, 15-ல் சிறப்பு முகாம் புதிய குடும்ப அட்டை பெற பிப். 1, 15-ல் சிறப்பு முகாம் Reviewed by நமதூர் செய்திகள் on 20:12:00 Rating: 5

No comments:

Powered by Blogger.