4 தங்கம் வென்ற மாணவருக்கு கலெக்டர் பாராட்டு

உலக அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நாக்பூரில் நடை பெற்றது. இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, மலேசியா, சிங்கப் பூர் உள்ளிட்ட பல்வேறு நாடு களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி னார்கள். இதில் இந்தியா சார்பில் தமிழகத்திலிருந்து பெரம் பலூர் மாவட்டம் உடும்பியம் ஈடன் கார்டன்ஸ் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவன் அருண்லெஸ்லி கலந்து கொண்டு விளையாடினார். 7 நாட்கள் நடைபெற்ற இப் போட்டியில் மாணவன் அருண்லெஸ்லி 4 தங்க பதக்கங்களை வென்று சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
உலக அளவிலான போட்டியில் கலந்து கொண்டு 4 தங்க பதக்கங்கள் வென்ற ஈடன் கார்டன்ஸ் பள்ளி மாண வன் அருண் லெஸ்லியை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது, முதன்மைக் கல்வி அதிகாரி மகாலிங்கம், பள்ளியின் தாளாளர் முருகேசன், செயல் அலுவலர் ராஜேந் திரன், நிர்வாக அலுவலர்கள் ஜோசப் ராஜ், சிதம்பரம், தலைமை யாசிரியர் ஜாக்கப்பிரசன்னா, முதல்வர் சேகர், மேலாளர் மதியழகன், உடற்கல்வி ஆசிரியர் சுதாகர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மாணவன் அருண் லெஸ்லி பெற்றுள்ள இந்த வெற்றியினைத் தொடர்ந்து வரும் மே மாதம் தென்னாப் பிரிக்காவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி யில் கலந்து கொண்டு விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4 தங்கம் வென்ற மாணவருக்கு கலெக்டர் பாராட்டு 4 தங்கம் வென்ற மாணவருக்கு கலெக்டர் பாராட்டு Reviewed by நமதூர் செய்திகள் on 20:05:00 Rating: 5

No comments:

Powered by Blogger.