முஸ்லிம் பட்டதாரி மாணவருக்கு நேர்ந்த அநீதி: தீவிரவாதி என சந்தேகித்து 3 தடவை சோதனை!

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இந்திய துணை குடியரசு தலைவர் ஹாமித்அன்சாரி பங்கேற்ற நிகழ்ச்சியின் முன்னோடியாக முஸ்லிம் மாணவர் ஒருவர்தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்டு 3 முறை உடல் பரிசோதனைக்குஆளாக்கப்பட்டுள்ளார்.இம்மாதம் 9-ஆம் தேதி முஹம்மது ஷாஹித் என்ற 2-ஆம்ஆண்டு பட்டப்படிப்பை பயிலும் மாணவர் தாடியை நீளமாக வளர்த்தியதற்காகஇழிவுப்படுத்தப்பட்டுள்ளார்.வெளித்தோற்றம் மற்றும் மதத்தின் அடிப்படையிலான பாரபட்சத்திற்கு தான்இரையானதாக சுட்டிக்காட்டி தேசிய மனித உரிமை கமிஷன், தேசிய சிறுபான்மைகமிஷன், உ.பி மாநில முதல்வர், பல்கலைக்கழக துணை வேந்தர் ஆகியோருக்குஷாஹித் புகார் மனு அனுப்பியுள்ளார்.லக்னோ பல்கலைக்கழகத்தின் ஒழுக்க கட்டுப்பாடு உறுப்பினரான ஒ.பி.சுக்லாஎன்பவர் நிகழ்ச்சி நடந்த முடிந்த மறு நாள் ஹாஸ்டல் அறையில் சோதனை நடத்தஉத்தரவிட்டதையும் பாரபட்சத்திற்கு ஆதாரமாக ஷாஹித்சுட்டிக்காட்டியுள்ளார்.’ஹாஸ்டல் வார்டனாகவும் பணியாற்றும் சுக்லாவுக்கு 2 ஆண்டுகளாக என்னைதெரியும்.ஆனால், என்னை உடல் பரிசோதனைச் செய்தபோது’ (பல்வேறுகுண்டுவெடிப்புகளில் போலீசாரால் குற்றம் சாட்டப்படும்) இக்பால் பட்கலைப்போல இவன் உள்ளான்.இவனது நடவடிக்கைகள் மர்மமாக உள்ளது’ என்று சுக்லாகூறினார்.’ என்று ஷாஹித் தெரிவித்தார்.இரண்டு தடவை உடல் பரிசோதனைச்செய்தபிறகே ஷாஹித் நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டார்.ஆனால், அடையாள அட்டையை பரிசோதிக்கும் பொறுப்பை மட்டுமே தான்வகித்ததாகவும், பாதுகாப்பு பரிசோதனைகளை மாவட்ட நிர்வாகம்தான் நடத்தியதுஎன்றும் பாதுகாப்பு கல்வி துறையில் பேராசிரியராகவும் பணியாற்றும் சுக்லாகூறுகிறார்.முன்பு ஷாஹிதின் ஹாஸ்டல் அறையில் இருந்து எலக்ட்ரிக் ஹீட்டரைகைப்பற்றியதாகவும் சுக்லா கூறுகிறார்.இதுக்குறித்து ஷாஹிதின் பேராசிரியையான அயாஸ் இஸ்லாஹி கூறுகையில்,’ஹாஸ்டல்வார்டன்கள் பேராசிரியர் போன்றவர்கள்.அவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளைப் போலநடந்துகொள்ளக் கூடாது’ என்று தெரிவித்தார்.ஷாஹிதின் மீது இதற்கு முன்னர்எவ்வித புகாரும் கிடைக்கவில்லை என்று இன்னொரு பேராசிரியர் கூறுகிறார்.தனி நபர்களை மதத்தின் அடிப்படையில் வேறுபடுத்துவதை ஒருபல்கலைக்கழகத்த்தில் இருந்து ஒருபோதும் எதிர்பாக்கவில்லை என்று சமூகஆர்வலரும், மகசேசே விருதுப் பெற்றவருமான சந்தீப் பாண்டே தெரிவித்தார்.சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான அனைத்து பாரபட்சங்களையும்கண்டிப்பதாக லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கமான எல்.டி.யு வின்தலைவர் வினோத் சிங் தெரிவித்தார்.ஷாஹிதிற்கு இழைக்கப்பட் - See more at: 

http://www.thoothuonline.com
முஸ்லிம் பட்டதாரி மாணவருக்கு நேர்ந்த அநீதி: தீவிரவாதி என சந்தேகித்து 3 தடவை சோதனை! முஸ்லிம் பட்டதாரி மாணவருக்கு நேர்ந்த அநீதி: தீவிரவாதி என சந்தேகித்து 3 தடவை சோதனை! Reviewed by நமதூர் செய்திகள் on 20:05:00 Rating: 5

No comments:

Powered by Blogger.