கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு துறையினர் திரண்டனர் பெரம்பலூரில் பரபரப்பு

பெரம்பலூர், : அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் இலவச பொருட்கள் கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு துறையினர் திரண்டனர். 
தமிழக அரசு உத்தரவுப் படி பொங்கல் பண்டி கையை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன்கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் பொங் கல் பண்டிகைக்கான இதரபொருட்கள் வாங்குவதற்காக ரூ100ம், இலவச வேஷ்டி, சேலை உள்ளிட்ட பரிசுத்தொகுப்புகள் வழங்கப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கு 1,60,818 கிலோ அரிசி மற்றும் 1,60,818 கிலோ சர்க்கரை மற்றும் இதர பொருட்களு டன், தலா ரூபாய் 100வீதம் ரூ1கோடியே 60லட்சத்து 81ஆயிரத்து 800மதிப்புடன் கூடிய பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் 1,56,9 87நபர்களுக்கு வேஷ்டிகளும், 1,59,002நபர்களுக்கு சேலைகளும் அனைத்து நியாய விலை கடகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பொங்கல் பொருட்கள் மற்றும் பணம் ஆகியன குடும்ப அட்டைதாரர்க ளுக்கு வழங்கப்படுவதுபோல, காவல் துறை யினருக்கும், முகாம்களில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கும் வழங்கப்படுகிறது. காவல் துறை யினருக்கு வழங்கப்படும் இவை அனைத்தும், அதற்கு சமமான தீயணைப்புத் துறையி னருக்கும், வனத்துறையினருக்கும் வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில் நேற்று தீயணைப்பு துறையை சே ர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று பெரம்பலூர் கலெ க்டர் அலுவலகத்திற்கு திர ண்டு வந்திருந்தனர். அவ ர்கள் மாவட்ட வருவாய் அலுவலரையும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் குறைதீர்க்கும் அலுவலரையும் சந்தித்து எங்களு க்கும் பொங்கல் பொரு ட்கள் வழங்கப்பட வேண் டுமென கோரிக்கை வைத் தனர். இது குறித்து வழங்கல்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, வந்த பொருளை தரவில்லை என் றால் இவர்கள் கேள்வியெழுப்பலாம். ஆனால் அவர்களுக்கு பொங் கல் பொ ருளே ஒதுக்கீடு செய் யாத நிலையில் எப்படி வழ ங் க முடியும். அவர்களது கேரி க்கைக்கு தமிழக அரசு தான் பதில் சொல்ல வே ண்டும். மாவட்ட நிர்வாகமல்ல என்றார். 
இது குறித்து தீயணைப்புத்துறையை சேர்ந்த ஒருவரிடம் கேட்டபோது, காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும், வனத்துறையினருக்கும் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள், அந்தந்த துறை சார்பாக மொத்தமாக வாங்கி வந்து, அவரவர் அலுவலகங்களில் வைத்து பிரித்து மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது. இத னால் ரேஷன்கடைகளுக்கு இவர்கள் நேரில் சென்று காத்திருக்கத் தேவை யில் லை. இந்நிலையில் காவல்துறையினருக்கு மட்டும் ரேஷன்கடைகளுக்கு நேரில் சென் று பொருட்களை வா ங் ஒகிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதால் அவர்களுக்கு பொதுமக்களை பேல ரேஷன்கார்டு வழங்கப் பட்டு விட்டது. எனவே குடும்பஅட்டை உள்ளோர் பட்டியலில் காவல்துறையினர் இடம் பெற்றி ருப்ப தால் அவர்களுக்கும் பொங் கல் பொ ருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீய  ணப்புத் துறை, வனத்துறையினர் மட்டும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர் என்றார்.
கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு துறையினர் திரண்டனர் பெரம்பலூரில் பரபரப்பு  கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு துறையினர் திரண்டனர் பெரம்பலூரில் பரபரப்பு Reviewed by நமதூர் செய்திகள் on 19:40:00 Rating: 5

No comments:

Powered by Blogger.