ஆதார் அட்டையைக் கட்டாயமாக்குவதற்கு எதிராக நூதன போராட்டம்!

மதுரை: மானிய விலையில் சமையல் எரிவாயு உருளை பெறுவதற்கு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்குவதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

மானிய விலையில் சமையல் எரிவாயு உருளை பெறுவதற்கு ஆதார் அட்டை எண் அவசியம் என பெட்ரோலிய நிறுவன வினியோகஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர். இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இருப்பினும், தங்களுக்கு சமையல் எரிவாயு மானிய விலையில் கிடைத்திட வேண்டும் என்பதால் ஆதார் எண்ணை பொதுமக்கள் பலர் போட்டியிட்டு பதிவு செய்து வருகிறார்கள். மதுரை நகர்மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் இன்னும் ஏராளமானோர் ஆதார் அட்டை எண் பெறாத நிலையில் உள்ளனர். ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் இதனை வலியுறுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக மதுரை மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், சமையல் எரிவாயு உருளைக்காக ஆதார் எண் கேட்கும் அறிவிப்பை மத்தியஅரசு நிறுத்தி அறிவிப்பு வெளியிட வலியுறுத்தி நூதனபோராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் அருகில் நேற்று காலையில் மாவட்ட குழு உறுப்பினர் மணிமேகலை தலைமையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சமையல் எரிவாயு உருளைக்கு மாலை போட்டு ஒரு பக்கத்தில் வைத்து விட்டு, பக்கத்தில் இரும்பு கரிஅடுப்பில் எவர்சில்வர் பானையை வைத்த சமைப்பது போல் வைத்திருந்தனர்.
உச்ச நீதிமன்ற இரு தீர்ப்புகளையும் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாமல், சமையல் எரிவாயு உருளைக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்குவதை விலக்கக்கோரி கோஷம் போட்டனர். இப்போராட்டத்தில் அண்ணாத்துரை எம்.எல்.ஏ., மாநகர் தலைவர் விக்ரமன், மாநிலகுழு உறுப்பினர் ஜோதிராம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆதார் அட்டையைக் கட்டாயமாக்குவதற்கு எதிராக நூதன போராட்டம்! ஆதார் அட்டையைக் கட்டாயமாக்குவதற்கு எதிராக நூதன போராட்டம்! Reviewed by நமதூர் செய்திகள் on 20:22:00 Rating: 5

No comments:

Powered by Blogger.