பெரம்பலூரில் காலை 8மணி வரை கடும் பனிப்பொழிவு மக்கள் அவதி

பெரம்பலூர், : பெரம்பலூரில் காலை 8 மணி வரை பனி பொழிவு இருப்பதால் மக்கள் வெளியே வரமுடியாமல் நடும் நிலை உள்ளது. 
கடந்த 2013ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை அதிகம் பெய்து, வடகிழக்குப் பருவமழை பொ ய்த்துப் போனதால் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெ ங்காயம் சாகுபடியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட னர். இந்தியாவில் எந்தமூலையில் புயல் வந்தாலும், அந்தப் புயலின் தாக்கமா வது இந்த மாவட்டத்தில் இருக்காதா? அதன் மூலம் மழை கிடைக்காதா என கடந்த ஆண்டு எதிர்பார் த்து எதிர்பார்த்து ஏமாந்து போயினர். இதனால் விவசாயிகள் மழையின்றி தவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டாவது மழை பெய் யுமா என பொது மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால் எதிர்பார்த்தது கிடைக்காமல் தேவையற்ற பனி தினமும் கொட்டித் தீர்ப்பதால் அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மார்கழி மாதம் முடிவடையவுள்ள நிலையில் சில தினங்களாக காலை நேரங்களில் பனியின் தாக்கம் மிகஅதிகமாகவே காணப்படுகிறது. 
இதனால் 7மணி வரை அருகிலுள்ள பச் சைமலை இருக்குமிடம் தெ ரியாமல் போகிறது.
பனிக்குப் பயந்து பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளி யேவர அஞ்சும் நிலையில் சில தினங்களாக சூரியனும் வெளியேவர அஞ்சுவதால் 8மணிக்குப் பிறகே வெயி லைப் பார் க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வயல்கள் அனைத்தும் பனிக்கான புகை மூடியதுபோல காட்சியளிக்கிறது.
பெரம்பலூரில் காலை 8மணி வரை கடும் பனிப்பொழிவு மக்கள் அவதி பெரம்பலூரில் காலை 8மணி வரை கடும் பனிப்பொழிவு மக்கள் அவதி Reviewed by நமதூர் செய்திகள் on 19:38:00 Rating: 5

No comments:

Powered by Blogger.