நீலாங்கரையில் சிறுவன் தமீம் சுடப்பட்டதை கண்டித்து SDPI கட்சி சாலை மறியல்!


NEELANKARAI PROTESTசென்னையில் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சிறுவன் தமீம் அன்சாரியின் வாயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டத்தில் தொண்டையில் குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த அந்தச் சிறுவனுக்கு சோழிங்கநல்லூரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் அவனை விசாரணைக்கு அழைத்து செல்லும் முன்பும் அவர் குடும்பத்திற்கு தகவல் தரவில்லை TVயில் செய்தியை பார்த்த பின்புதான் எங்களுக்கு தெரியும் என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இதனை கண்டித்து சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் SDPI சார்பாக இன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் முகம்மது பிலால், மாவட்ட பொதுச்செயலாளர் அபுபக்கர், மாவட்ட செயலாளர் அன்சாரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் மற்றும் ஹகீம் மற்றும் SDPI நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பெரும்திரளாக வந்து கலந்து கொண்டனர்.
போலிசாரைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும் எதிர்ப்பு கோஷங்களும் எழுப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட முயன்றதை போலிசார் தடுத்துவிட்டனர்.
இதில் பின்வரும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன
1, சுடப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
2, போலிஸ் இன்ஸ்பெக்டர் புஸ்பராஜ் மற்றும் இதற்கு காரணமான காவலர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.
3. இதற்கு காரணமான காவலர்களை கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மீதுஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்து சமரசம் செய்னர்.
இதனைஅடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இன்று மாலை ECR ல் உள்ள வெட்வாண்கேணியில் அனைத்து கூட்டமைப்பின் சார்பாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் குண்டடி பட்ட சிறுவனை SDPI நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனையில் சென்று சந்தித்தனர்.
omr-4 omr-3 omr-2 NEELANKARAI PROTEST
நீலாங்கரையில் சிறுவன் தமீம் சுடப்பட்டதை கண்டித்து SDPI கட்சி சாலை மறியல்! நீலாங்கரையில் சிறுவன் தமீம் சுடப்பட்டதை கண்டித்து SDPI கட்சி சாலை மறியல்! Reviewed by நமதூர் செய்திகள் on 20:29:00 Rating: 5

No comments:

Powered by Blogger.