பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் 11.1.2014 அன்று நடைபெற்றது. இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அஹமது நவவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செய்யது அப்துல் கரீம் வரவேற்புரையாற்றினார். அம்பை வட்டார தலைவர் அல்லா பிச்சை, செயற்குழு உறுப்பினர்கள் இதிரீஸ் பாதுஷா, இலியாஸ், அமீன், வழக்கறிஞர் ஆரிஃப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த செயற்குழுவில் கடந்த ஒரு வருட மாவட்டத்தின் வளர்ச்சிகள் குறித்தும், பிப்ரவரி 17 பாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டத்தை குறித்தும், மற்றும் மாநில பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட மதவாத பாசிசத்திற்கு எதிரான பிரச்சாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டு தீர்மான்ங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக மாவட்ட செயலாளர் செய்யது அப்துல் கரீம் தீர்மானங்களை வசித்து நன்றியுரையாற்றினார்.

தீர்மானங்கள்:

1. நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக அரசு மருத்துவமனை வளாகத்தில் மலிவு விலை உணவகமான அம்மா உணவகத்தை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயற்குழு வலியுறுத்துகிறது.

2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்த கல்வியாண்டிற்கான கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று (12.01.2014) நடைபெறுகிறது. இதில் 10 லட்சம் ருபாய் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

3. “பிப்ரவரி 17” பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், பேரணி, நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி, மருத்துவ முகாம்கள், அரசு மருத்துவமனையில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

4. வள்ளியூரில் தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடும் பாரதிய ஜனதாவின் வர்த்தக பிரிவின் மாநில துணை தலைவர் ஜெயச்சந்திரனை வன்மையாக கண்டிப்பதோடு, தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு, திண்டுகல்லில் தனது வீட்டிலேயே குண்டு வீசிவிட்டு நாடகமாடும் பா.ஜ.க, நிர்வாகி மற்றும் இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் அரசியல் ஆதாயத்திற்காகவும் பிற சமூகங்களை குற்றம்சாட்டவும் நடைபெற்று வருவது சமீப காலமாக ஆதரப்பூர்வமாக வெளி வந்து இருக்கிறது இதன் அடிப்படையில் குண்டுவெடிப்புகள் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகளின் கொலை வழக்குகளை நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.

5. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது மதவாத ஃபாசிசத்திற்கு எதிரான மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை நெல்லை மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், தெரு முனைக் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் வாயிலாக மாவட்டம் முழுவதும் கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

இவண்
ஊடகத் தொடர்பாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
நெல்லை மாவட்டம்

Reviewed by நமதூர் செய்திகள் on 02:05:00 Rating: 5

No comments:

Powered by Blogger.