மாநில அளவிலான ஊரகத் திறனாய்வுத் தேர்வில் பாடாலூர் பள்ளி மாணவர்கள் 9 பேர் தேர்ச்சிப் பெற்று சாதனை

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அன்னை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 9 பேர் மாநில அளவிலான ஊரகத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகை யில் 9–ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டுதோறும் ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடத்தி அதில் வெற்றிப்பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கி வருகிறது. அதன்படி, மாநில அளவிலான ஊரகத் திறனாய்வுத்தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் பயிலும் பள்ளி மாணவ, மாணவி யர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
அதில் பாடாலூர் அன்னை மேல்நிலைப் பள்ளியில் 9–ம் வகுப்பு பயிலும் 12 மாணவ, மாணவியர்கள் கலந்துக் கொண்டு தேர்வு எழுதினர். அதில் நிவேதா, இளவரசி, தீபா, காவியா, சுகன்யா, மதுபாலா, கபில், சம்பத், வெங்கடேஸ் ஆகிய 9 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சிப்பெற்று சாதனைப் படைத்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட வுள்ளது.
இந்த சாதனைப் படைத்த மாணவர்களையும், பள்ளியின் தலைமையாசிரியர் மீனாவையும், பள்ளியின் தாளாளர் மாணிக்கம் பாராட்டி இனிப்பு வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத் தில் ஒரே பள்ளியில் 9 மாணவ, மாணவிகள் தேர்ச்சிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
மாநில அளவிலான ஊரகத் திறனாய்வுத் தேர்வில் பாடாலூர் பள்ளி மாணவர்கள் 9 பேர் தேர்ச்சிப் பெற்று சாதனை மாநில அளவிலான ஊரகத் திறனாய்வுத் தேர்வில் பாடாலூர் பள்ளி மாணவர்கள் 9 பேர் தேர்ச்சிப் பெற்று சாதனை Reviewed by நமதூர் செய்திகள் on 06:59:00 Rating: 5

No comments:

Powered by Blogger.