சுயவிருப்பத்துடன் மதம் மாற உரிமை உண்டு:உயர்நீதிமன்றம்

ஒருவர் சுயவிருப்பத்துடன்  மதம் மாறுவதற்கு சட்டப்படி உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த கீதா என்பவர் தாக்கல்செய்த ஆள்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன்,வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவபிறப்பித்தனர்.
கீதா தனது மனுவில், எனது மகள் பவித்ராவை(19),  தபிவீத் என்பவர் கடத்திச்சென்று கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டார். மகளை மீட்க காயல்பட்டினம் போலீஸôருக்கு உத்தரவிடவேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இம்மனு விசாரணைக்கு வந்த போது போலீஸôர் பவித்ராவை ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரித்த பிறகு நீதிபதிகள் அமர்வு பிறப்பிóத்த உத்தரவு:
மனுதாரரின் மகள் பவித்ராவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் சட்டவிரோதமாக தங்கவைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் தனது விருப்பத்தின் பேரிலேயே இஸ்லாம் மதத்துக்கு மாறி திருமணம் செய்து கொண்டுள்ளார். இóஸ்லாம் மதத்துக்கு மாற யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுதனது பெற்றோருக்கும் தெரியும் என தெரிவித்துள்ளார்.  பவித்ரா திருமண வயதை அடைந்தவர் என்பதால் அவர் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது. மேலும் ஒருவர் தான் விரும்பும் மதத்துக்கு மாறுவது என்பதும் சட்டப்பூர்வ உரிமையாகும். எனவே திருமணம் மற்றும் மதமாற்றம் ஆகிய விஷயங்களில் தவறு காண முகாந்திரம் ஏதுமில்லாததால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுயவிருப்பத்துடன் மதம் மாற உரிமை உண்டு:உயர்நீதிமன்றம் சுயவிருப்பத்துடன் மதம் மாற உரிமை உண்டு:உயர்நீதிமன்றம் Reviewed by நமதூர் செய்திகள் on 20:18:00 Rating: 5

No comments:

Powered by Blogger.