அயன்பேரையூரில் நாளை செஸ் போட்டி

வேப்பந்தட்டை :  பெரம்பலூர் மாவட்ட அளவி லான செஸ் போட்டி வேப்பந்தட்டை அருகே உள்ள அயன்பேரையூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை (11ம் தேதி) நடைபெறுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்முறையாக அங்கீகரிக்கப்பட்ட செஸ் போட்டி நாளை (11ம் தேதி)  மற்றும் நாளை மறுதினம் (12ம் தேதி) காலை 8.30 மணியளவில் நடைபெறுகிறது. 11, 13, மற்றும் 17 என வயது வாரியாக போட்டிகள் நடைபெறும். ஆண்கள் மற்றும் பெண்கள்  பிரிவில் வெற்றிபெறுபவர்களுக்கு தலா 10 கேடயம் வீதம் மொத்தம் 3 பிரிவுகளுக்கு 60 கேடயங்கள் வழங்கப்படும். இப்போட்டிகள் அனைத்தும் தொடர்ந்து 2 லீக் முறையில் நடைபெறும் என்பதால், அதற்கேற்ப போட்டியாளர்கள் தயார் நிலையில் வரவேண்டும் என்றும், தொழுதூர் ம்றறும திருமாந்துறை  டோல்கேட் பகுதிகளில் இருந்து போட்டி நடைபெறும் விஸ்டம் பள்ளிக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளி நிர்வாகி தெரிவித்தார்.
அயன்பேரையூரில் நாளை செஸ் போட்டி அயன்பேரையூரில் நாளை செஸ் போட்டி Reviewed by நமதூர் செய்திகள் on 20:12:00 Rating: 5

No comments:

Powered by Blogger.