வி களத்தூரில் நாளை போலியோ சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


வி களத்தூரில் நாளை போலியோ சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) 362 மையங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்கவும்,  குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுக்கவும் பிறந்த  குழந்தை முதல் 5 வயதுக்குள்பட்ட அனைத்து  குழைந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம்கள் ஜன. 19 மற்றும் பிப். 23 ஆகிய தேதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள்,  துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவ மனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் என 362 மையங்களில் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம்களில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி
பணியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் என 1,448 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டில் உள்ள பிறந்த குழந்தை முதல், 5 வயதுக்குள்பட்ட அனைத்து  குழைந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து புகட்ட முன்வர வேண்டும்.
ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து புகட்டியிருந்தாலும், தற்போது நடைபெற உள்ள  முகாம்களிலும் சொட்டு மருந்து புகட்டலாம்.
குழைந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதநோய் வராமல்  தடுக்க, இந்த முகாமை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
*****************
அது சமயம் வி களத்தூரில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளிவாசலில் போலியோ சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
குழைந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதநோய் வராமல்  தடுக்க இந்த முகாமை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.  
வி களத்தூரில் நாளை போலியோ சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வி களத்தூரில் நாளை போலியோ சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது Reviewed by நமதூர் செய்திகள் on 19:58:00 Rating: 5

No comments:

Powered by Blogger.