காங்கிரஸ் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை - மாயாவதி திட்டவட்டம்!

லக்னோ: "உத்தரப் பிரதேசத்திலோ அல்லது தேச அளவிலோ காங்கிரஸ், பாஜக அல்லது எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம்." என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
தமது பிறந்த நாளான இன்று (புதன்கிழமை) லக்னோவின் பிரமாண்ட தேர்தல் பிரச்சாரப் பேரணியை மாயாவதி நத்தினார்.
இதில் கலந்துகொண்டு பேசிய மாயாவதி, "நரேந்திர மோடி வெறும் ஆறு கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் முதல்வர், அங்கு இந்து - முஸ்லிம்கள் இடையிலான கோத்ரா கலவரத்தைத் தடுக்க முடியவில்லை. அப்படியிருக்க பல்வேறு மதங்களும் சாதிகளும் கொண்ட நாட்டை எப்படி அவரால் பாதுகாக்க முடியும்?
கோத்ரா கலவர நிகழ்வுதான் நாட்டையே உலுக்கியது. அப்படியிருக்க, குஜராத் போலவே நாட்டையும் மேம்படுத்துவேன் என்று அனைத்து கூட்டங்களிலும் மோடி வாக்குறுதி அளிப்பது சரியானதா?
அவர்கள் (பாஜக) ஊழலை ஒழிப்பதாக முழங்குகிறார்கள். ஆனால், லோக் ஆயுக்தாவை குஜராத்தில் அமைப்பதற்கு நீதிமன்றம்தான் துணை நின்றது. அதுவும், அம்மாநிலத்தில் அந்த அமைப்பு மிகவும் பலவீனமாகவே உள்ளது" என்றார்.
மேலும், "2003 ல் பாஜகவுடன் தேசிய அளவில் கூட்டணி வைக்க சிபிஐ-யைத் தவறாக பயன்படுத்தி பகுஜன் சமாஜ்வாடிக்கு நிர்பந்தம் அளித்த பாஜகவுடன் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் கூட்டணி வைக்கமாட்டோம். காங்கிரஸ் உட்பட எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் பகுஜன் சமாஜ்வாடி தனித்தே போட்டியிடும்" என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை - மாயாவதி திட்டவட்டம்! காங்கிரஸ் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை - மாயாவதி திட்டவட்டம்! Reviewed by நமதூர் செய்திகள் on 20:08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.