குற்றவாளிகளை கைதுச் செய்யாமல் முஸஃபர் நகர் மக்களின் மறுவாழ்வு சாத்தியமல்ல! வஜாஹத் ஹபீபுல்லாஹ்!

புதுடெல்லி: முஸஃபர் நகரில் கலவரத்தை கட்டவிழ்த்துவிட்ட குற்றவாளிகளை கைதுச் செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பச் செல்ல இயலாது என்று தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர வஜாஹத் ஹபீபுல்லாஹ் தெரிவித்தார்.
இதுக்குறித்து வஜாஹத் ஹபீபுல்லாஹ் கூறியது: குற்றவாளிகள் கிராமங்களில் தீவிரமாக நடமாடுகிறார்கள். இவர்களை கைதுச் செய்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் அரசு மேற்கொள்ளவில்லை.
கிராமவாசிகளுடன் பேசி முஸ்லிம்களை திரும்பச் செல்வதற்கான முயற்சிகளை தன்னார்வ இயக்கங்களுடன் பேசி தயார் செய்துள்ளோம்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அங்கு நிறைய காரியங்களை செய்யவேண்டியுள்ளது. திரும்பிச் செல்ல வேறு இடம் இல்லாததால் அகதிகள் அரசு நிலங்களில் தங்கியுள்ளார்கள். அவர்களை வெளியேற்றவேண்டாம் என்றும் தேவையான உதவிகளை வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முகாம்களை பார்வையிட்டு தேசிய சிறுபான்மை கமிஷன் உறுப்பினர் தயாரித்த அறிக்கையை படித்துக்கொண்டிருக்கிறோம். அதற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உ.பி அரசு சமர்ப்பித்த அறிக்கையில் பலம் பிரயோகித்து பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இவ்வறிக்கையில் கமிஷனுக்கு திருப்தி இல்லை. இவ்வாறு வஜாஹத் ஹபீபுல்லாஹ் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் இருந்து கூட்டாக வெளியேற்றிய உ.பி அரசின் நடவடிக்கை குறித்து கமிஷன் அதிருப்தி தெரிவித்தது.
குற்றவாளிகளை கைதுச் செய்யாமல் முஸஃபர் நகர் மக்களின் மறுவாழ்வு சாத்தியமல்ல! வஜாஹத் ஹபீபுல்லாஹ்! குற்றவாளிகளை கைதுச் செய்யாமல் முஸஃபர் நகர் மக்களின் மறுவாழ்வு சாத்தியமல்ல! வஜாஹத் ஹபீபுல்லாஹ்! Reviewed by நமதூர் செய்திகள் on 20:25:00 Rating: 5

No comments:

Powered by Blogger.