ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் முயற்சி அதிகாரிகள் சமரசம்

முருக்கன்குடி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
கட்டிடம் இடிப்பு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் முருக்கன்குடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தில் அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி வருவதாகவும், இதை கண்டித்து அக்கிராமத் தின் ஒரு பகுதி பொதுமக்கள் கடந்த மாதம் 30-ந்தேதி ஆக்கரமிக்கப்பட்ட இடத்தை மீட்க வேண்டும் என வலியுறுத்தி முருக்கன்குடி பேருந்து நிறுத்தம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மங்கலமேடு போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி யளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப் பட்டது. பின்னர் அன்று மாலையே வருவாய் துறை அதிகாரிகள் சில கட்டிடத்தை இடித்து தள்ளினர்.
சாலை மறியல் முயற்சி
இந்நிலையில் நேற்று காலை முருக்கன்குடி கிராமத்தின் மற்றொரு பகுதி பொதுமக்கள் முருக்கன் குடி கிராமத்தில் பேருந்து நிலையத்திற்கு அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பு களை அரசு அதிகாரிகள் பாரபட்சம் காட்டாமல் அகற்றக் கோரி சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர்.
அதிகாரிகள் சமரசம்
தகவல் அறிந்த மங்கலமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், குன்னம் தாசில்தார் பூங்கோதை, குன்னம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் நமசு, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சாலை மறியலுக்கு முயற்சி செய்த பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சு வார்த்தையில் வாரி புறம் போக்கில் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளில் நில அளவ ரால் அளந்து காட்டப்பட்ட பகுதியினை ஆக்கிர மிப்பு தாரர்கள் அவர்களாவே அகற்றப்படவில்லையெனில் 7 தினங்களுக்குள் ஆக்கிர மிப்புகள் அகற்றிதரப்படும் என அதிகாரிகள் கையெழுத் திட்டு உறுதி அளித்ததை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் முயற்சி அதிகாரிகள் சமரசம் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் முயற்சி அதிகாரிகள் சமரசம் Reviewed by நமதூர் செய்திகள் on 19:52:00 Rating: 5

No comments:

Powered by Blogger.