பெரம்பலூரில் இன்று புத்தக திருவிழா தொடக்கம்


பெரம்பலூர் நகராட்சி திடலில் வெள்ளிக்கிழமை (ஜன. 31) 3-வது புத்தக திருவிழா தொடங்க உள்ளது.

 பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் ஆதரவுடன், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் அறக்கட்டளை இணைந்து நடத்தும் புத்தக திருவிழா  ஜன. 31 முதல் பிப். 9}ம் தேதி வரை நடைபெற உள்ளது. நிகழாண்டு நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் ரூ. 2 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள 115 அரங்குகளில் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், கணினி, சமையல், வர்த்தகம், இலக்கியம், விவசாயம், நாட்டுப்புறக் கலைகள், பண்பாடு, ஓவியம் என லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள், 70-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இடம் பெற உள்ளன.  மேலும், சாகித்திய அகதெமியின் சார்பில் புத்தக அரங்கு இடம்பெற்றுள்ளது. 10 நாள்கள் நடைபெற உள்ள புத்தக திருவிழாவில், அறிஞர் பெருமக்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் பட்டி மன்றம், கவியரங்கம், வழக்காடு மன்றம் உள்ளிட்ட இலக்கிய நிகழ்வுகள், பதிப்பாளர்களின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. நாள்தோறும் தலைசிறந்த உலகப் புகழ்பெற்ற திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
புத்தக திருவிழாவில், ஒரு நாளைக்கு ரூ. 1,000-க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு சிறப்பு கூப்பன் வழங்கப்பட்டு, நிறைவு விழாவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு பரிசு வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புத்தக திருவிழாவை சிறப்பிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது.
பேட்டியின்போது, சார் ஆட்சியர் பா. மதுசூதன் ரெட்டி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அய்யம்பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தா. மலையாளம், மக்கள் பண்பாட்டு மன்றத் தலைவர் சரவணன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பெரம்பலூரில் இன்று புத்தக திருவிழா தொடக்கம் பெரம்பலூரில் இன்று புத்தக திருவிழா தொடக்கம் Reviewed by நமதூர் செய்திகள் on 22:43:00 Rating: 5

No comments:

Powered by Blogger.