மோடிக்கு வழங்கப்பட வேண்டிய விருதுகள்!
1 Jan 2014
25.12.2013 தி ஹிந்து ஆங்கில நாளேட்டில் ஒரு விளம்பரம். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 89வது பிறந்த நாள் வாழ்த்தாக, குஜராத் அரசின் சாதனைகளை விவரித்தது அந்த விளம்பரம்.
அந்த விளம்பரம் அனைவருக்கும் தெரிந்ததுதான். மறைந்த ஹிட்லரை விஞ்சும் அளவுக்கு, ஹிட்லருக்கே ரோல் மாடலாக பிரதமர் கனவோடு சுற்றிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடியின் குஜராத் அரசு சிறந்த அரசு என்று குஜராத்துக்கு வழங்கப்பட்டுள்ள 285 விருதுகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டிருந்தது.
உலக அளவிலான, இந்திய அளவிலான, மாநில அளவிலான என்று விருதுகளின் பட்டியலை அழகாக அட்டவணைப்படுத்தி இருந்தார்கள். அதில் விடுபட்ட விருதுகள் இதோ:
1. 2002ம் ஆண்டு குஜராத் இனப்படுகொலை, 3,000த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை. சிறந்த இனப்படுகொலைக்கான உலக நாயகன் விருது.
2. முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, சிசுவை வெளியே எடுத்துக் கொலை. சிறந்த சிசுக் கொலைக்கான சகலகலா வல்லவன் விருது.
3. இஷ்ரத் ஜஹான், சொஹ்ராபுதீன் ஷேக், கௌசர் பீவி உட்பட பலர் போலி என்கௌண்டரில் சுட்டுக் கொலை. என்கௌண்டர் ஏகாம்பரம் விருது.
4. குஜராத்தில் குழந்தைகளும், நிர்க்கதியான பெண்களும் எரித்துக் கொல்லப்பட்டனர். கலவரத்தை வேடிக்கை பார்த்த முதல்வர் நரேந்திர மோடி. நவீன நீரோ நாயகன் விருது.
5. பா.ஜ.க. கனவுக் கோட்டையின் மண் குதிரைதான் நரேந்திர மோடி. மண் குதிரை நாயகன் விருது.
6. இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலம் குஜராத். வறுமை தலைவிரித்தாடுகிறது. இவருக்கு பிரதமர் வேட்பாளர் ஆசை. பிரதமர் வேடத்திற்குப் பொருத்தமான சிறந்த நடிகர் விருது.
7. வெளிநாட்டுக் கம்பெனிகள் தங்களின் வருவாயைப் பெருக்கிக் கொள்ள குஜராத்தில் முதலீடு செய்கின்றனர். அந்தக் கம்பெனிகளுக்கு மோடி அடிமைச் சேவகம் செய்து வருகிறார். இதனால் உயர்ஜாதி மக்களே பயனடைந்து வருகின்றனர். வெளிநாட்டுக் கம்பெனிகளின் சிறந்த அடிமை விருது.
8. இந்திய அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலை ஆப்பிரிக்காவில் வாழும் மக்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஏழைகளின் எமன் என்ற சிறப்பு விருது.
9. குஜராத்தில் விவசாயிகளுக்கு மின்சாரம் கிடையாது. விவசாயம் வீழ்ச்சியின் அதளபாதாளத்தில் உள்ளது. விவசாயிகளின் தொடர் தற்கொலைகள். அதிக விவசாயிகளின் தற்கொலைச் சாதனை விருது.
10. கார்ப்பரேட்டுகளின் சிறந்த அடிவருடியாக நரேந்திர மோடி. விவசாயிகளின் வருவாயை லஞ்சமாக பிடுங்குவது, அவர்களின் வயிற்றில் அடிப்பது என்று தொடர்ந்து கொண்டிருக்கின்றது அநீதிகள். கார்ப்பரேட்டுகளின் அடிவருடி அழகன் விருது.
11. மோடியின் ஆட்சியில் குஜராத்தின் கடன் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 2002ல் 45,301 கோடி. 2013ல் 1,38,978 கோடி. குஜராத் கடனை அதிகரிக்கச் செய்த பெருமைக்காக கடனை அதிகரித்த காவலன் விருது.
12. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இந்தியாவிலேயே மிகக்குறைந்த தினக்கூலி உள்ள மாநிலம் குஜராத். குஜராத்தில் 89% ஆண்களும், 98% பெண்களும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக தினக்கூலிகளை உருவாக்கிய அருமை அண்ணன் விருது.
13. குஜராத்தில் கல்வியின் தரம் மிக மோசமாக இருப்பதாக யுனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தைகள் கல்வி குறித்த அமைப்பு கூறுகிறது. கல்வியை மோசமாக்கிய கண்மணி விருது.
13. குஜராத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை தமிழகத்தை விட அதிகம். இந்தியாவில் மிகவும் வறட்சியான மாநிலம் குஜராத். 10 மாவட்டங்களைச் சேர்ந்த 3,918 கிராமங்கள் முற்றிலுமாக குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. சிறந்த வறட்சி நாயகன் விருது.
14. வறுமை ஒழிப்பில் ஒரிசாவை விட பின்தங்கிய மாநிலம் குஜராத். முஸ்லிம் கிராமங்கள் அதிகமாக வறுமையில் இருப்பது குஜராத்தில்தான். வறுமை கண்ட பெருமை நாயகன் விருது.
15. கிராமப்புறங்களில் 67% மக்களும், நகர்புறங்களில் 69% மக்களும் பொது இடங்களையே கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பறை கழிசடை விருது.
16. குஜராத்தில் நகர்ப்புறங்களில் உள்ள 170 உள்ளாட்சி அமைப்புகளில் 158 அமைப்புகளின் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்வதற்கான நிலையங்கள் இல்லை. சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லா சுத்திமான் விருது.
17. குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் மரணங்கள் குஜராத்தில் அதிகம். இதனால் அதிகமான குழந்தைகள் இறப்புக்குள்ளாகின்றனர். ஊட்டச்சத்துக் குறைபாடு கண்ட மூட்டைப்பூச்சி விருது.
18. குஜராத்தில் முறையான மருத்துவ வசதிகள் கிடையாது. இதனால் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் அதிகமாக இறப்புக்குள்ளாகின்றனர். மருத்துவ வசதி இல்லா மகத்துவ விருது.
19. பள்ளிக்கூடங்களில் படிப்பை இடையில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட குஜராத்தில் அதிகம். Dropouts Dragon விருது.
20. குஜராத்தில் மிக எளிதாக கள்ளச்சாராயம் கிடைக்கும். சிறுவர்கள் இதனை அதிகமாக விற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் கண்ட கள்ளநாயகன் விருது.
21. இளம் வயது குற்றவாளிகளின் எண்ணிக்கையில் குஜராத் முதலிடம். சமூக வளர்ச்சித் திட்டங்களில் குஜராத் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இளம் குற்றவாளிகளின் இனமான விருது.
மேற்கண்ட விருதுகளை மோடிக்கு வழங்கி அவரைக் கௌரவிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு,
விருது வழங்குவோர் அமைப்பு
நெல்லை சலீம்
மோடிக்கு வழங்கப்பட வேண்டிய விருதுகள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:00:00
Rating:
No comments: