சச்சார் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை

சச்சார் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை. 65 ஆண்டுகளாக முஸ்லிம்களை வாக்கு வங்கியாகவே காங்கிரஸ் பயன்படுத்துகிறது - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு கடந்த ஜூலை மாதம் டெல்லி வாழ் முஸ்லிம்களுக்கு அர்விந்த் கெஜ்ரிவால் ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.

 அதில் குறிப்பிடப்பட்டு உள்ள முக்கியமான விஷயங்கள் ..., கடந்த 65 ஆண்டுகளாக முஸ்லிம்கள் காங்கிரஸுக்கு வாக்களித்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் காங்கிரசுக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பது கட்டாயமாகவே இருந்து வருகிறது. காரணம், BJP ஆட்சிக்கு வந்து விடுவார்களோ என்ற முஸ்லிம்களின் அச்சத்தை காங்கிரஸ் ஒவ்வொரு தேர்தல்களிலும் தங்களுக்கான வாக்காக அறுவடை செய்து வருகிறது. 

கடந்த 65 ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் செய்தது என்ன? சச்சார் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக சுமார் 65,000 சிறிய மற்றும் பெரிய கலவரங்கள், பல ஆண்டுகளாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் அடைத்தது, வக்ப் வாரியத்தில் ஊழல், இடஒதுக்கீடு அளிப்பதாக பொய்யான வாக்குறுதிகள் என அடுக்கடுக்காக முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துள்ளது. 

முஸ்லிம்களை என்றைக்கும் தங்களுடைய வாக்கு வங்கியாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முஸ்லிம்களை முன்னேற விடாமல், தொடர்ந்து பின் தங்கியவர்களாகவே வைத்துக் கொள்கிறது. இன்று இந்தியாவில் முஸ்லிம்கள் தங்களுடைய சொந்த நாட்டில், சொந்த வீட்டில் ஒருவித அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் பல ஆண்டுகளாக விசாரணை கைதிகளாக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பின்னர் ஆதாரம் இல்லாததால் விடுவிக்கபடுகின்றனர்.

 இதன் மூலம் இவர்களின் மொத்த வாழ்க்கையும் சீரழிந்து விடுகிறது. சிறைச்சாலைக்கு சென்று வந்தவன் என்பதால் யாரும் வேலை கொடுப்பதில்லை, அவனுக்கு சகோதரிகள் இருந்தால் அவர்களை யாரும் திருமணம் செய்ய முன் வருவதில்லை. இது போன்ற கொடுமைகளை ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இளைஞர்கள் அனுபவித்து வருகின்றனர். ஏன் நாம் அனைவரும் அரசியல் வாதிகளை சார்ந்து இருக்க வேண்டும்? 

1984 ஆம் ஆண்டு சீக்கியர்கள் டெல்லியில் கொல்லப்பட்ட போது , சீக்கியர்கள் BJP க்கு ஆதரவு தெரிவித்தனர், 2002 முஸ்லிம்கள் குஜராத்தில் கொல்லப்பட்ட போது , காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். காங்கிரஸும் , BJPயும், முஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் எதுவும் செய்து விட வில்லை, உங்களை ஒட்டு வங்கியாக பயன்படுத்தியதை தவிர.. இந்தியாவில் தலைசிறந்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் அவர்களை மக்கள் நன்கு அறிவர். 

இவர் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியமானவர்களில் ஒருவர். இவர் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு வருகிறார். ஏராளமான முஸ்லிம்கள் குஜராத்தில் போலி என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டு உள்ளனர். இர்ஷத் ஜஹான் என்பவரும் போலி என்கவுன்டர் மூலமே கொல்லப்பட்டு உள்ளார்.

 இந்த போலி என்கவுன்டர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பிரசாந்த் பூஷன் முஸ்லிம்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறார்... ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் வக்ப் வாரியம் அரசிடம் இருந்து விடுவிக்கபடும். இஸ்லாமிய இளைஞர்கள் அநியாயமான முறையில் ஆதாரம் இல்லாமல் கைது செய்யபடுவது தடுக்கப்படும். 

டெல்லியில் வாழக்கூடிய முஸ்லிம்கள் நடைபாதை வியாபாரியாகவோ, சிறு தொழில் செய்பவராகவோ தான் உள்ளனர். இவர்களிடமிருந்து பணம் பறிக்கும் காவல்துறையினர் தண்டிக்கபடுவார்கள்.கடந்த 66 ஆண்டுகளாக முஸ்லிம்கள் மிகவும் வறுமையில் உள்ளனர். இவர்களின் குழந்தைகளுக்கு தரமான இலவச கல்வி அளிக்கப்படும். இது கடிதத்தின் ஒரு பகுதி மட்டுமே.கெஜ்ரிவால் டெல்லி முஸ்லிம்களுக்கு எழுதிட கடிதத்தை பார்வையிட கீழே உள்ள முகவரிக்கு செல்லவும்.
சச்சார் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை சச்சார் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை Reviewed by நமதூர் செய்திகள் on 05:51:00 Rating: 5

No comments:

Powered by Blogger.